album cover
Meendum Meendum
1,662
Tamil
Meendum Meendum was released on April 1, 2008 by One Vision Entertainment as a part of the album Meendum Meendum
album cover
Release DateApril 1, 2008
LabelOne Vision Entertainment
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

Lyrics

மீண்டும் மீண்டும் ஓயாமல்
காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும்
உண்மை காதல் வாழும்
உன்னில் நானே
கண்ட வேதம்
பனிப்பூவாய்
என்மேல் விழுந்தாய், உயிரே உறையுதடி
இதற்கும் மேலாக ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி
மீண்டும் மீண்டும் ஓயாமல்
காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
உண்மைக்காதல் மறையாது
பாதைக்கூட தவறாமல்
ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்
எந்த காலம் பிறந்தாலும்
காலம் சொல்லும் பதிலாக
தெய்வீகமே இந்த காதல்
தாயைப்போலே... நான் அள்ளிக் கொள்வேன்
உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே...
விடுமுறை காணாமல்
தொடர்ந்திடக்கூடாதா
நானும் நீயும் வாழ்க்கை தூரம்
மீண்டும் மீண்டும் ஓயாமல்
காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும்
உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கண்ட வேதம்
மின்னல் ஒன்று கரை வீச
நெஞ்சம் ஒன்று குடை சாய
மின்னல் நீயே, நெஞ்சம் நானே
தென்றல் வந்து முத்தமிட
கோரத்தீயும் பூவாய் மாற
தீயும் நானே, தென்றல் நீயே
ஆசையெல்லாம் நான்
அள்ளிக்கொண்டு
வந்தேன் வந்தேன்
உந்தன் வாசல்
புயலென்ன மழையென்னவோ
கடந்திட வேண்டாமா
நானும் நீயும் வாழ்க்கை தூரம்
மீண்டும் மீண்டும் ஓயாமல்
காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
கல்லும் முள்ளும் கண்டாலும்
உண்மை காதல் வாழும்
உன்னில் நானே கண்ட வேதம்
பனிப்பூவாய்
என்மேல் விழுந்தாய், உயிரே உறையுதடி
இதற்கும் மேலாக ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி
என் கவிதையில் சேருதடி
மீண்டும் மீண்டும் ஓயாமல்
காதல் நெஞ்சை அள்ளும்
நீயே எந்தன் சுக வாசல்
Written by: Dhilip Varman & Ku.venugopal
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...