Lyrics

உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே காக்கை குருவி எங்கள் ஜாதி என்றே சொன்னான் பாரதி வாழும் உலகை அன்பால் வெல்ல செய்வோம் செய்வோம் ஓர் விதி நேயம் இருந்தால் போதுமடா காயம் உடனே ஆறுமடா ஆறுமடா இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடறை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம் ஹாஆ... ஆ ஹாஆ... ஆஅ... உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே மேலே என்ன கீழே என்ன ஏனோ இந்த பாடுகள் ஆசை அன்பு காதல் கொண்டால் தீரும் எல்லைக் கோடுகள் வாசம் மலரின் மேடையடா நேசம் உலகின் ஆடையடா ஆடையடா இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடறை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம் ஏழை கோழை என்றே பார்த்து வானம் பொழிவது இல்லையடா நீயா நானா சண்டை போட பூமி சுழல்வது இல்லையடா மரம் என்றால் காற்று மணல் என்றால் ஊற்று இயற்கையில் ஏது பிரிவினை இணைவது தானே உறுதுணை எதுவும் இங்கே கைவசம் ஆக அறிவோம் அறிவோம் மனிதமே முடியும் என்றால் உதவிகள் செய்து கலைவோம் கலைவோம் துயரமே துயரமே இணைவோம் இணைவோம் இதயம் பூக்க இணைவோம் இணைவோம் இணைவோம் இடறை நீக்க இணைவோம் இணைவோம் இணைவோம் மனிதம் காக்க இணைவோம் இணைவோம் உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே நெஞ்சில் நேசம் கொள்வோம் என்றால் கல்லும் தெய்வம் ஆகுமே உண்மை அன்பை நாமும் காட்ட கண்ணீர் மட்டும் போதுமே யாவும் ஒரு நாள் மாறிடுமே காலம் வழியை காட்டிடுமே காட்டிடுமே...
Writer(s): Yugabharathi, D Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out