Credits

PERFORMING ARTISTS
Kalyani Nair
Kalyani Nair
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Songwriter

Lyrics

உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
உன் கூட ஒதுங்காம கால் நட போடுமே
உன்ன சேரவே படி தாண்டுமே
உன்ன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே விலகாமலே உன்னோடு வாழ சேரும் எல்லாமே
உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
அவரை கொடியா உன்ன விடாம படர நெனப்பேன் மலை காட்டுல
கவலை துளியும் தொட விடாம உன்னையும் சுமப்பேன் உயிர் கூட்டுல
ஊரே சேந்து அடிச்சு தொவைச்சாலும்
உன்ன சேர பொழச்சு கெடப்பேனே
உன் கையில கை ரேகையா ஒளிஞ்சு இருப்பேனே உலகம் மறப்பேனே
உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
உன் கூட...
பொழுது விடியும் வரை நிலாவா மிதந்து வருவேன் தல கோதிட
விடிஞ்ச பெறகும் பகல் கனாவா ஒதுங்க மரப்பேன் கத கேட்டிட
காலம் பூரா சலிச்சு எடுத்தாலும் யாரும் இல்ல உனக்கு இணையாக
என் கண்ணுல தங்காம நீ ஒதுங்க நினைக்காத உசுர உடைக்காத
உன் கூட துணையாக நான் வர வேணுமே
அதிலே சுகம் பெற வேணுமே
உன்ன நெருங்க இரவு பகல் அழகாகுமே
உயிர் உருக பழகி விடு அது போதுமே
ஒரு நாளுமே விலகாமலே உன்னோடு வாழ சேரும் எல்லாமே
உன் கூட...
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...