Credits
PERFORMING ARTISTS
P. B. Sreenivas
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Composer
Kannadasan
Songwriter
Lyrics
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ.
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ.
பால் மணக்கும் பருவத்திலே
உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே
சிட்டுப் போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே.
என் வயது மாறுதடா.
உன்னுடனும் ஆடிவர...
உள்ளமே தாவுதடா
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
ஒருவரின் துடிப்பினிலே.
விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே.
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே.
என்ன மொழி பிள்ளைமொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி.
தேவன் தந்த தெய்வ மொழி
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா.
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
பூப்போன்ற நெஞ்சினிலும்
முள்ளிருக்கும் பூமியடா...
பொல்லாத கண்களடா.
புன்னகையும் வேஷமடா ...
நன்றி கெட்ட மாந்தரடா.
நானறிந்த பாடமடா.
நன்றி கெட்ட மாந்தரடா.
நானறிந்த பாடமடா.
பிள்ளையாய் இருந்துவிட்டால்.
இல்லை ஒரு துன்பமடா.
கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் மின்னும் எந்தன் கண்ணா.
சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy

