Credits

PERFORMING ARTISTS
K. Veeramani
K. Veeramani
Performer
COMPOSITION & LYRICS
Dr. Ulundurpettai Shanmugam
Dr. Ulundurpettai Shanmugam
Songwriter
Somu - Gaja
Somu - Gaja
Composer
Sivamani
Sivamani
Songwriter
Nellai Arulmani
Nellai Arulmani
Songwriter

Lyrics

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
கர்ப்பூர தீபம் ஸ்வாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்காவலனாய் இருப்பார்
தேக பலம் தா, பாத பலம் தா
தேக பலம் தா, பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
ஸ்வாமியே ஐயப்போ
ஐயப்போ ஸ்வாமியே
சரணம் சரணம் ஐயப்பா... ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா... ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா... ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா... ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா... ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா... ஸ்வாமி சரணம் ஐயப்பா
Written by: Dr. Ulundurpettai Shanmugam, Nellai Arulmani, Sivamani, Somu - Gaja
instagramSharePathic_arrow_out

Loading...