Credits

Lyrics

மொழியாகி எங்கள்
மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
வல்லமை தருமன் உங்களின் வசலில் அங்குமே வணங்குகின்றோம்
வல்லமை தருமன் உங்களின் வசலில் அங்குமே வணங்குகின்றோம்
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
வல்லமை தருமன் உங்களின் வசலில் அங்குமே வணங்குகின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது
எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது
எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம்
அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியரசு என்றிடுவோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியரசு என்றிடுவோம்
எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்
எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா
குழியினுள் வாழ்பவரே
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே
Written by: Eelam Music
instagramSharePathic_arrow_out

Loading...