album cover

Em Thandhai

887Tamil2010
album cover
Em Thandhai was released on January 20, 2010 by Anak Audio as a part of the album Aasal (Original Motion Picture Soundtrack)
ReleasedJanuary 20, 2010
LabelAnak Audio
BPM92
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

சிங்கம் என்றால் எம் தந்தை தான்
செல்லம் என்றால் எம் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தை தான்
எம் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்
விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும் அவர் சொல்லிலே
அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே பகை நீங்குமே
அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே
அழியாத உயிர் கொண்ட எம் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும் எம் அன்னையே
வீரத்தின் மகனென்று விழி சொல்லுமே
வேழத்தின் இனமென்று நடை சொல்லுமே
நிலையான மனிதன் என பேர் சொல்லுமே
நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே
உன் போலே சிலர் என்று உருவாகலாம் - உன்
உடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா?
எப்போதும் தோற்காது உன் சேனை தான்
இருந்தாலும் இறந்தாலும் நீ யானை தான்
கண்டங்கள் அரசாளும் கலை மூர்த்தி தான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும் உன் கீர்த்தி தான்
தலை முறைகள் கழிந்தாலும் உன் பேச்சு தான்
தந்தை எனும் மந்திரமே எம் மூச்சு தான்
சிங்கம் என்றால் எம் தந்தை தான்
செல்லம் என்றால் எம் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தை தான்
எம் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்
Written by: Bharadwaj, Vairamuthu

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...