album cover
Ellame Marenthene
63
Indian Pop
Ellame Marenthene was released on December 31, 2021 by Zenith Music Productions as a part of the album Ellame Marenthene - Single
album cover
Release DateDecember 31, 2021
LabelZenith Music Productions
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Thiagu Murugesu
Thiagu Murugesu
Performer
Anand Sadacharam
Anand Sadacharam
Performer
Surmukhi
Surmukhi
Performer
Vaisagh
Vaisagh
Performer
COMPOSITION & LYRICS
Thiagu Murugesu
Thiagu Murugesu
Composer

Lyrics

எல்லாமே மறந்தேனே முழுதாய்
என் பார்வை உன் மேல் விழுந்ததனால்
சொல்லாமல் பறந்தாயே எதனால் அழகியே
என் காதல் உன் மேல் மலர்ந்ததனால்
இரு இரு இரு
ஒரு நொடி பொறுத்திரு
விரு விருவென
என் ஆசை சொல்வேனே
மறு நிபந்தனை
செவி மடுத்துத்திடு
துணை இவன் என
ஒரு பதில் இனி நிதம் உரைத்திடுவாய்
எல்லாமே மறந்தேனே முழுதாய் அழகியே
என் பார்வை உன் மேல் விழுந்ததனால் அன்பே
காதல் கதைகள் பேசி கடலில் கரைந்து தொலைந்தே போவோம்
தொலைவில் உன்னை காண காலம் கடந்து காத்திருப்பேனே
நினைவில் உன்னை காண கனவுகளோடு நடந்தவன் நானே
பொல்லாத கண்கள் என்னை கொல்லாமல் கொல்கின்றதே
போகாத வலிகள் தேடி என் கால்கள் அலைகின்றதே
மீளாத ரணங்கள் கூட உனை கண்டதும் மறந்தோடுதே
தேவதை நேயே தேடி வந்தாயே
பாலையில் பூத்த நறுமுகை பூவே
இருதய வேகம் நொடியினில் கூடும்
படர்ந்திடும் காற்றை காதல் என்னுளே
Humming
முதல் முறை இதயத்தில் வலி
என் இனியவள் வருகிற வழி
எந்நாளும் ஏங்கி ஏங்கி காத்திருக்கும் சுகம் தனி
இது ஒரு புதுவித நிலை
எனில் மெது மெதுவென வரும் மழை
உன்னாலே
பாயும்
நெஞ்சில் பரவச அலை
மஞ்சள் மாலை நீயும் நானும் சேரும் காலம் சொர்க்கமாய்
வாழும் காலம் யாவையும் காதல் பேச வா வா அழகியே வா
எல்லாமே மறந்தேனே முழுதாய்
என் பார்வை உன் மேல் விழுந்ததனால்
சொல்லாமல் பறந்தாயே எதனால் அழகியே
என் காதல் உன் மேல் மலர்ந்ததனால்
இரு இரு இரு
ஒரு நொடி பொறுத்திரு
விரு விருவென
என் ஆசை சொல்வேனே
மறு நிபந்தனை
செவி மடுத்துத்திடு
துணை இவன் என
ஒரு பதில் இனி நிதம் உரைத்திடுவேன்
என்னுள்ளே இனிதாக மலர்ந்தாய்
உன் காதல் வாசம் படர வைத்தாய்
உன் பார்வை கணை எய்து வதைத்தாய் முதல் முறை
என் நாணம் நீயும் உணரவைத்தாய் அன்பே
Written by: Thiagu Murugesu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...