Lyrics

ஏண்டி என்னை பாத்தே எதுக்காக உள்ள பூத்தே உயிர் நூலுல என்னை நீயும் தான் கொடி போல மேல ஏத்த ஓரம் போன காத்த உறவாக நீயும் சேத்தே இனி நானுமே உனக்காக தான் நெதம் போடுவேனே கூத்த உன் பேச்சில ரயில் ஓடுது நடுவீதியிலே அது நாட்டியம் ஆடுது கை சேந்திட மனம் ஏங்குது எசை பாட்டையும் பாடிட ஆசையும் கூடுது ஏண்டி என்னை பாத்தே எதுக்காக உள்ள பூத்தே உயிர் நூலுல என்னை நீயும் தான் கொடி போல மேல ஏத்த ஏ-ஏ-ஏ-ஏ-ஏ-ஏ ஊசிய போடும் உன் விழியால தூங்கல சில நாளா ஒரு வார்த்தைய நீயும் பேசுற போது ஆகறேன் செம தூளா நின்ன இடத்துல உன்னை நினைச்சி நான் திசை மாறி போகிறேன்டி கொள்ளை அடிக்கிற வெள்ளைச் சிரிப்புல வெறி ஏற நோகுறேன்டி அடி ஆழம் தேடி ஓடும் நீராய் நானும் வழிஞ்சேன்டி வயலாக விளைஞ்சேன்டி ஏண்டி என்னை பாத்தே எதுக்காக உள்ள பூத்தே உயிர் நூலுல என்னை நீயும் தான் கொடி போல மேல ஏத்த ஹோ பால் முகம் மாறா உன் முகம் பாத்தே ஆவி பறி போச்சு ரதி தேவிய போல நீ கதை பேச ஊரே அழகாச்சே இஞ்சி இடுப்புல என்னை சுமந்திட பச்சை குழந்தை ஆகறேன்டி நெஞ்சு இடுக்குல உன்னை பதுக்கி நான் மச்சக் கணக்க பாக்குறேன்டி மொளகாவா நீயும் காரம் தூக்க வீட்டை மறந்தேன்டி உன்னைத் தூக்க துணிஞ்சேன்டி ஏண்டி என்னை பாத்தே எதுக்காக உள்ள பூத்தே உயிர் நூலுல என்னை நீயும் தான் கொடி போல மேல ஏத்த ஓரம் போன காத்த உறவாக நீயும் சேத்தே இனி நானுமே உனக்காக தான் நெதம் போடுவேனே கூத்த உன் பேச்சில ரயில் ஓடுது நடுவீதியிலே அது நாட்டியம் ஆடுது கை சேந்திட மனம் ஏங்குது எசை பாட்டையும் பாடிட ஆசையும் கூடுது ஏண்டி என்னை பாத்தே எதுக்காக உள்ள பூத்தே உயிர் நூலுல என்னை நீயும் தான் கொடி போல மேல ஏத்த
Writer(s): Yugabharathi, Jubin Jubin Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out