Credits

PERFORMING ARTISTS
VishnuRam
VishnuRam
Lead Vocals
COMPOSITION & LYRICS
VishnuRam
VishnuRam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sivakumar
Sivakumar
Producer

Lyrics

குளிரும் வானம் மேகம் போர்த்தும் நேரம்
தெய்வம் ஒன்று தந்தையோடு தூங்கும்
நிலவும் தோன்றும் ஆரிராரோ பாடும்
தென்றல் தீண்டும் தலையை கோதி வாரும்
துருதுரு துரும்பாய் மெல்லக் குறும்பாய்
இந்த நாள் கழித்து செல்வ மகள் மெல்ல தூங்குகிறாள்
சின்னச் சின்ன சிரிப்பில் புது ஜொலிப்பில்
பலர் முகத்தில் அவள் புன்னகையை அள்ளி தூவுகிறாள்
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
கண்ணுறங்கும் வேளையில் விரல்கள் கடிப்பாள்
கண்கள் மூடி தூங்கியும் கனவில் சிரிப்பாள்
ஒரு வானவில்லாய் வளைந்து
அவள் உறக்கம் களைகிறாள்
எனை காணவில்லையென்று சிறு கலக்கமடைகிறாள்
ஒரு வானவில்லாய் வளைந்து
அவள் உறக்கம் களைகிறாள்
எனை காணவில்லையென்று
அவள் கலக்கம் கொண்டு என்னை தேடும் நேரங்களில்
வாழ்க்கை முழுமையாகுதே
அவளின் கண்ணில் மின்னும் தூய்மை யாவும்
எந்தன் கண்ணில் இறைவனை காட்டும்
கண்டிடாத காற்றிலும் அவள் கீதங்கள்
அறிந்திடாத மனிதரும் அவள் சிநேகங்கள்
என் இன்று நேற்று நாளை அவையாவும் அவளிடம்
அவள் பிஞ்சு மடியை தாண்டி எனக்கேது புகலிடம்
என் இன்று நேற்று நாளை அவையாவும் அவளிடம்
அவள் பிஞ்சு மடியில் நானும்
என் வாழ்வின் தஞ்சம் தேடி செல்லும் நேரங்களில்
மகளும் அன்னையாகிறாள்
மகளாய் வந்த எந்தன் தாயும் நீயே
மார்பில் சாய்ந்து கண்ணுறங்கு தாயே
Written by: VishnuRam
instagramSharePathic_arrow_out

Loading...