Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Harshad Ibrahim
Lead Vocals
COMPOSITION & LYRICS
Madhuran Thamilavel
Composer
PRODUCTION & ENGINEERING
Hashan Thilina
Producer
Lyrics
சிரிச்சு சிரிச்சு உசிர செதச்சு
நெஞ்சுக்குள்ள மின்னல் கொட்டி போறா பொதச்சு
ஆச மறச்சு அங்க இங்க மொறச்சு
கனவுல கலவரம்தான் தந்தா இனிச்சு
அடி செழிச்சு நிக்கும் திமிரே என்ன திகைக்கவைக்கும் புதிரே
இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
மொட்டு வெடிச்சுநிக்குற மலரே என்ன கிறங்கடிக்கிற அழகே
இசையா வருடும் புதுத்தமிழே
மனசு சுத்தும் பம்பரம் உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
இனி வராம நீ போனா உசிரு தீயா வெந்திடும்
மனசு சுத்தும் பம்பரம் உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
இனி வராம நீ போனா உசிரு தீயா வெந்திடும்
சொக்குறேன் திண்டாடி திக்குறேன்
புயல் மழகாத்து பட்டமரம் போல நிக்குறேன்
யட்சியே அதிசய பட்சியே
கொஞ்சி கனாவுல நீ தினமென்ன நெஞ்சில் தச்சியே
அடி செழிச்சு நிக்கும் திமிரே என்ன திகைக்கவைக்கும் புதிரே
இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
மொட்டு வெடிச்சுநிக்குற மலரே என்ன கிறங்கடிக்கிற அழகே
இசையா வருடும் புதுத்தமிழே
இதயத்த இறுக்கி தறுக்கி திருக்கும் சிறுக்கி
நித்தம் உலையில மனச உருக்கி
உள்ள அலையுற நெருப்ப பொருத்தி
நெனப்பு தவிக்க சிரிச்சு வருத்தி
மட திறக்குது மாரி வெள்ளம்
மன நதியில மீன்கள் துள்ளும்
நெஞ்சம் அந்தரிச்சு மயங்கிக் கொள்ள
அன்பில் முக்குளிக்க வாடி புள்ள
ரத்தினம் அத்தபெத்த சித்திரம்
இவ சொல்லுக்குள்ள அடங்காத ஒரே அற்புதம்
கொல்லுற முட்டிமுட்டி தள்ளுற
உச்சிமொத இனி மிச்சமில்ல மனச அள்ளுற
அடி செழிச்சு நிக்கும் திமிரே என்ன திகைக்கவைக்கும் புதிரே
இரவுக்கு நிறம் கொடுக்கும் கதிரே
மொட்டு வெடிச்சுநிக்குற மலரே என்ன கிறங்கடிக்கிற அழகே
இசையா வருடும் புதுத்தமிழே
மனசு சுத்தும் பம்பரம் உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
இனி வராம நீ போனா உசிர் தீயா வெந்திடும்
மனசு சுத்தும் பம்பரம் உள்ளுக்குள்ள நீயே மந்திரம்
இனி வராம நீ போனா உசிர் தீயா வெந்திடும்
Written by: Madhuran Thamilavel