Credits

PERFORMING ARTISTS
Nivas
Nivas
Lead Vocals
Arun Bharathi
Arun Bharathi
Performer
Vijay Antony
Vijay Antony
Lead Vocals
COMPOSITION & LYRICS
Arun Bharathi
Arun Bharathi
Songwriter
Vijay Antony
Vijay Antony
Composer

Lyrics

கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை அம்மா நானே
தோகை மயிலே
என் வாழ்வின் பொருளே
உன் அண்ணன் இல்லை அம்மா நானே
உயிரே போகும் நொடியும்
அன்பை தருவேன், நான் தானே!
உலகே மயிராய் தெரியும்
உன்தன் மடியில், பொன்மானே!
கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை அம்மா நானே
தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும்
உன்னை தேரில் வைப்பேன் கண்ணே
கடவுளே வந்து சொன்னாலும்
உன்னை பிரியமாட்டேனே பெண்ணே
மூச்சு நின்று போனாலும்
ஆவியாகி நான் வருவேன்
உலகின் மொத்த அன்பெல்லாம்
உனக்கு காட்டுவேன்
இனியோர் பிறவி எடுத்தால்
உனக்கு தாயாய் மாறுவேன்
அழுதிடும் உன்னை நான் கண்டால்
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்
என் விரலினை பிடித்து நீ வந்தால்
சொர்க்கம் மண் மீது பிறக்கும்
வேண்டுமென்று நீ கேட்டால் உயிரை மீட்டுவேன் உன்னை
பூமி உடைந்து போனாலும்
கையில் தாங்குவேன்
இனியோர் பிறவி எடுத்தால்
உனக்கு தாயாயை மாறுவேன்
கோயில் சிலையே
என் தாயின் நகலே
உன் அண்ணன் இல்லை அம்மா நானே
Written by: Arun Bharathi, Vijay Antony
instagramSharePathic_arrow_out

Loading...