Credits
PERFORMING ARTISTS
S.P. Balasubrahmanyam
Vocals
Ilaiyaraaja
Performer
Vaalee
Performer
R. V. Udayakumar
Performer
Rajinikanth
Actor
Meena
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaali
Lyrics
Lyrics
அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு
வளை காப்பு தங்க காப்பு
இவ கை பிடிச்சு பூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
கிளி மூக்கு முத்தம்மா
என் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
(அடி ராக்குமுத்து ராக்கு)
(புது ராக்குடியை சூட்டு)
வான்சுமந்த வான்சுமந்த வெண்ணிலவ வெண்ணிலவ
தான்சுமந்த தான்சுமந்த பெண்நிலவே பெண்நிலவே
(மூணு மாசம் ஆன பின்னே முத்துவரும் முத்துவரும்)
(பூர்வஜென்மம் சேர்த்து வச்ச சொத்துவரும் சொத்துவரும்)
வெள்ளிமணி தொட்டில் ஒண்ணு
விட்டத்தின் மேலே மாட்டிடனும்
தங்கமணி கண்ணுறங்க
தாலேலோ பாடி ஆட்டிடனும்
(அடி வாடி ரங்கம்மா)
(தெரு கோடி அங்கம்மா)
(வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு)
அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு
(ஏழு சட்டி மார்கழிக்கும் பொங்கவச்சி பொங்கவச்சி)
(மாவிளக்கும் பூவிளக்கும் ஏற்றிடனும் ஏற்றிடனும்)
வாரிசு ஒண்ணு தந்தற்கு நன்றி சொல்லி நன்றி சொல்லி
ஏழைக்கெல்லாம் கூழு காய்ச்சி ஊத்திடனும் ஊத்திடனும்
அம்மன் அருள் இல்லையின்னா
பெண்ணிங்கு தாயாய் ஆவதெங்கே
பிள்ளை செல்வம் இல்லையென்ற
பேச்சுக்கள் பொய்யாய் போனதிங்கே
(ஊரில் எல்லாரும்)
(ஒண்ணு சேரும் இந்நேரம்)
(வானவராயருக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு)
அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு
அட வேலாண்டி பால்பாண்டி வேட்டிய கட்டுங்கடா
அட மாயாண்டி முனியாண்டி மத்தளம் கொட்டுங்கடா
கிளி மூக்கு முத்தம்மா
அவர் வாக்கு சுத்தம்மா
வானவராயனுக்கும் ராணிக்கும் வாரிசு வந்தாச்சு
அடி ராக்குமுத்து ராக்கு
புது ராக்குடியை சூட்டு
(அடி ராக்குமுத்து ராக்கு)
(ராக்குடியை சூட்டு)
(காப்பு தங்க காப்பு)
(கை பிடிச்சு பூட்டு)
Written by: Ilaiyaraaja, R. V. Udayakumar, Vaali

