Credits

PERFORMING ARTISTS
Kamal Haasan
Kamal Haasan
Actor
S. Janaki
S. Janaki
Vocals
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vaalee
Vaalee
Lyrics

Lyrics

கண்மணி அன்போட காதலன் நான் நான்
எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சிக்கலாமா
வேணா கடிதமே இருக்கட்டும், படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
ஹ்ஹ பாட்டாவே படிச்சிட்டியா அப்ப நானும்
மொதல்ல கண்மணி சொன்னேன் இல்ல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
ஆஹ ஒ உன்ன நினைச்சு பாக்கும் போது கவிதை
மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனும்னு உக்காந்தா
அந்த எழுத்து தான், ஹும் வார்த்த ஹு
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது (அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் ஆஹா பிரமாதம் கவிதை கவிதை, படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஒ-ஹோ கண்மணி அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
லா-லல-ல-லல-ல-லல-லா-லா
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
லா-லல-ல-லல-ல-லல-லா-லா
ம், எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல, இதையும் எழுதிக்க
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே
இதெல்லாம் போட்டுக்கணும் ஹும்
தோ பாரு எனக்கு என்ன காயன்னாலும் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா? தாங்காது
அபிராமி, அபிராமி அபிராமி (அதையும் எழுதனுமா?)
ஹ்-ஹ்ன், அது காதல் ஹஹ், என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நான் அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது
வர்ற அழுக கூட நின்னுடுது ஹ்-ஹஹ-ஹ-ஹஹ-ஹ
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல
காதல் அல்ல, காதல் அல்ல, காதல் அல்ல, காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது புனிதமானது
உண்டான காயம் இங்கு தன்னாலே மாறிப் போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கி கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது
வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா
சுபலாலி லாலியே லாலி லாலியே
அபிராமி லாலியே லாலி லாலியே
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
உனக்கு புரியுமா
லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
லால-லால-லால-லா, லால-லால-லா
லல-லால-லால-லா-லால-லால-லா ஓஹோ
லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
லா-லலா-லா-லால-லால-லா-லா-லால-லால-லா
Written by: Ilaiyaraaja, Vaalee, Vaali
instagramSharePathic_arrow_out

Loading...