album cover
Ava Ava
1
Indian Pop
Ava Ava was released on May 1, 2025 by Kavitha Gopi as a part of the album Ava Ava - Single
album cover
Release DateMay 1, 2025
LabelKavitha Gopi
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Credits

PERFORMING ARTISTS
Kavitha Gopi
Kavitha Gopi
Performer
Muralihassan
Muralihassan
Music Director, Rap
Sundar Raj
Sundar Raj
Keyboards
Bavan
Bavan
Choir
Willson
Willson
Choir
Edi
Edi
Percussion
COMPOSITION & LYRICS
Muralihassan
Muralihassan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sam
Sam
Assistant Engineer
Sundar Raj
Sundar Raj
Mixing Engineer, Recording Engineer

Lyrics

அவா அவா
அவா எல்லாம் அவா
அவா எல்லாம் அவா
அவால்லாம் இல்லாட்டி ஏது ஓய் புவா நமக்கு புவா?
ரோட்ட போட்டது அவா
நம்ம வீட்ட கட்னது அவா
அரிசி கோதும ரவா
இத விளைய வச்சது அவா
ஆடைய தச்சது அவா
அத ஓடையில் துவச்சதும் அவா
ஊரையும் தெருவையும் கூட்டி பெருக்கி சுத்தம் செஞ்சது அவா
நாட்டின் அரசை மாற்றி அமைக்க ஓட்டு போட்டது அவா
மாறிய அரசும் மற்றம் தருமுன்னு ஏங்கி கிடப்பதும் அவா
ஒரு ஓட்டு கூட வாங்காம அமைச்சர் ஆகும் நாட்டுல நாங்க உழைச்சி உழைச்சி ஓடாய் போயி ஒதுங்கி கிடக்கிறோம் ரோட்டுல்ல!
அவா எல்லாம் அவா
வியர்வையில் வாழ்ந்தோமே...
வறுமையில் வீழ்ந்தோமே...
நேர் வழி சென்றோமே...
கையும் காலும் மிச்சமே...
சொத்து பத்து இல்லையன்னா கீழ் மக்களா?
இங்க ஊர் சொத்த பதுக்குன்னா மேன்மக்களா?
உழைப்பவன் இல்லைன்னா நாடு தாங்குமா?
அவன் நெற்றி வியர்வை சிந்தலன்னா பசி ஆறுமா?
புரட்சிக்கு மேளம் கொட்டு..
ஆதிகத்த ஓடவிட்டு..
சமத்துவ பாலம் கட்டு..
சாதி மதம் ஓரங்கட்டு..
இங்க குப்பைய போட்டவன் சோக்காலி
அத குனிஞ்சி எடுப்பவன் அழுக்காலி
பட்டயம் படிச்சவன் கோமாளி இங்க பக்கோடா விறப்பவன் அறிவாளி
ஏழை மாட்டுக்கறி திண்ணா பாவமடா
அத ஏற்றுமதி செஞ்சா லாபமடா
அரசு துறை எல்லாம் தளருது இங்க தனியார் துறை மட்டும் வளருது
ஐய்யாயிரம் கோடியில கல்யாணம்
இங்க அன்னாடங் காச்சிக்கு இல்ல வருமானம்
தொழில் தொடங்குபவனுக்கு கந்து வட்டி ஆனா தொழில் அதிபர்களுக்கு தள்ளுபடி தள்ளுபடி கடன் தள்ளுபடி
நீட்டுக்கும் சீட்டுக்கும் ஸ்வாஹா...
ஜிஎஸ்டி ஜிலேபி ஸ்வாஹா..‌.
கேஸுக்கும் பெட்ரோலுக்கும் ஸ்வாஹா...
ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா...
பாடுபட்டோம் பாடுபட்டோம் பாடுப்ட்டோம்
காடு மேடு ரோடு எல்லாம் பழுது பார்த்தோம்
செங்கல் சூலையில வெந்து கிடந்தும் வீட்ட கட்ட முடியில
காடு கழனியில உழன்று கிடந்தும் கானி நிலமும் நமக்கில்ல
சந்திர மண்டலத்தில் சாட்லைட்ட இறக்கிட்டோம்
சாக்கட குழிக்குள்ள இன்னும் மனுஷன இறக்குறோம்
ஆயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும் இங்க உழைக்கிற வர்க்கம் உயரல
கடவுளின் பிறவிகள் ஆண்டாலும் எங்க கண்ணீர் கதைகள் முடியில
எங்கள தவிக்க விட்டது எவா?
ஏழைங்க வைத்துல அடிச்சது எவா?
உழைக்கும் மக்கள சுரண்டி சுரண்டி சொகுசா வாழ்வது எவா?
அவா எல்லாம் அவா
Written by: Muralihassan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...