album cover
Nathi Vellam
1,595
Tamil
Nathi Vellam was released on May 3, 2013 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Thangameenkal (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateMay 3, 2013
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM80

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Rahul Nambiar
Rahul Nambiar
Performer
Ram
Ram
Actor
Rohini
Rohini
Actor
Sadhana
Sadhana
Actor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics

Lyrics

அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால், அப்படி எல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை
நதி, வெள்ளம் மேலே என் மீனே-மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில், என் மானே-மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
அடி, என் கண்ணின் இரு கருவிழிகள் உன் முகத்தை தேடுதடி
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி
என் காட்டில் ஒரு மழை வந்ததும் மகரந்த ஈரங்கள் காயும்முன்னே
இடி, மின்னல் விழுந்து காடே எறிந்ததடி
நதி, வெள்ளம் மேலே என் மீனே-மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில், என் மானே-மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
அலைந்திடும் மேகம் அதைப் போல இந்த வாழ்க்கையே
காற்றின் வழியில் போகின்றோம்
கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில்
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்
உயிரே, உன்னை பிரிந்தேன், உடனே நானும் இறந்தேன்
உடல்தான் அங்கு வாழும், நீதானே எந்தன் உயிரே
நதி, வெள்ளம் மேலே என் மீனே-மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில், என் மானே-மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
மலர் ஒன்று விழுந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் விழுந்தால் சருகாகும்
வரியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே, உன்னை பிரிந்தேன், உடனே நானும் இறந்தேன்
உடல்தான் அங்கு வாழும், நீதானே எந்தன் உயிரே
நதி, வெள்ளம் மேலே என் மீனே-மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில், என் மானே-மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்
Written by: Na. Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...