album cover
Amma
515
Pop
Amma was released on June 19, 2026 by Raghu Dixit Music as a part of the album Jag Changa
album cover
Release DateJune 19, 2026
LabelRaghu Dixit Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM154

Music Video

Music Video

Credits

Lyrics

ஓ மார்போடு எனை அள்ளி
சுமந்தாய் அம்மா
ஹே பாசத்தை பாலக
உயிரூட்டி வளர்த்தாய் அம்மா
என் கண்ணீர் சிரிப்போடு
உன் வாழ்க்கை தொலைத்தாய்
நான் இன்று மரமானேன்
நீ தானே விதைத்தாய் அம்மா
ஓ மார்போடு எனை அள்ளி
சுமந்தாய் அம்மா
என் கண்ணீர் சிரிப்போடு
உன் வாழ்க்கை தொலைத்தாய்
நான் இன்று மரமானேன்
நீ தானே விதைத்தாய் அம்மா
உலகில், உலகில்
உறவு பல இருக்கும்
துவழும் மனமோ
உனைத்தான் நினைக்கும்
தொலைவில் இருந்தும்
எனக்காய் நீ துடித்தாய்
இரவும் பகலும்
எனைதான் நினைத்தாய்
வீழும் போதெல்லாம்
என்னை தாங்கி கொள்வாய்
வான் மீது மீண்டும்
எனை ஏற்றி செல்வாய்
மேலேறி பறந்தேனே உன்னாலே
ஹே நான் உன்னை மறந்தேனே
புகழ் தேடி பறந்தோடி
போனேன் அம்மா
ஹேய் மார்போடு எனை அள்ளி
சுமந்தாய் அம்மா
தனியோர் உலகில் தொலைந்தேன்
எனக்காய் வாழ்ந்தே கிடந்தேன்
உலகம் ரசிக்க
பாடல் செய்தேன்
உனக்கோர் பாடல்
புனைந்திட மறந்தேன் அம்மா
உனக்கின்று பாடினேன்
உன்னை பற்றி பாடினேன்
என் தவறை நான் உணர்ந்து
உந்தன் மடி தேடினேன்
உந்தன் ஒரு அணைப்புக்கு
விருதுகள் நிகரில்லை
நீ இல்லாத உலகில்
இந்த வெற்றிகளில் பொருளில்லை
இப்போதுன் பாதத்தில் விழுகின்றேன்
ஹே மீண்டும் உன் மடி ஏறி
உறங்கத்தான் பார்க்கின்றேன்
நீ பாடு அம்மா
ஹே-ய் மார்போடு எனை அள்ளி
சுமந்தாய் அம்மா
ஹேய்-ய் பாசத்தை பாலக
உயிரூட்டி வளர்த்தாய் அம்மா
என் கண்ணீர் சிரிப்போடு
உன் வாழ்க்கை தொலைத்தாய்
நான் இன்று மரமானேன்
நீ தானே விதைத்தாய் அம்மா
ஓ மார்போடு எனை அள்ளி
சுமந்தாய் அம்மா
Written by: Madan Karky, Raghu Dixit
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...