album cover
Chillena (From "Raja Rani")
album cover
Chillena (From "Raja Rani") was released on February 12, 2015 by Think Music as a part of the album Love
AlbumLove
February 12, 2015
LabelThink Music
BPM139
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய்
நான் மாறினேன் பெண்ணே
[Verse 1]
அட கருப்பட்டியே என் சீனி கிழங்கே
சிரிச்சி கவுத்தாத
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையில நீ
கப்பல் ஒட்டாதே
கண்ணால பாக்காம
கண்ணாலம் பண்ணலாமா
கைகோர்த்து போலாமா
[Verse 2]
கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு
என்று என் விழிகள் அய்யய்யோ எனை திட்ட
கோடை கால மழை வந்து போன பின்னும்
சாலை ஓர மரம் தன்னாலே நீர் சொட்ட
என்னை தாக்கும் புயலே
இரவோடு காயும் வெயிலே
உன்னாலே...
உன்னாலே-ஏ-ஏ-ஏ...
நூலில்லா காற்றாடி ஆனேனே
[Chorus]
அடி பெண்ணே
அடி கண்ணே
நான் விழுந்தால்
உன் பாதம் சேர்வேனே
உன் விழிகளிலே ஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளாய்
நான் மாறினேன் பெண்ணே
[Chorus]
சில்லென ஒரு மழை துளி
என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே
[Verse 3]
காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி
மீண்டு நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா
கோபம் கொள்கையிலும் கிறங்க வைக்குதடி
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா
ஆளை கொள்ளும் அழகே
நிழல் கூட அழகின் கதவே
[Verse 4]
ஒரு நாளும் குறையாத
புது போதை கண்ணோரம் தந்தாயே
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய்
நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமாய்
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய்
எனை தாக்கினாய் முன்னே
Written by: G. V. Prakash Kumar, Na Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...