Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
P. Unnikrishnan
Performer
Bombay Jayashri
Performer
Nayanthara
Actor
Udhayanidhi Stalin
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Vairamuthu
Lyrics
Lyrics
கண்களோடு இரு கண்களோடு ஒரு காந்தல்
பூத்ததடி பெண்ணே
காற்றிலாடி சிறு காற்றிலாடி ஒரு
காதல் பூத்ததடி கண்ணே
நெஞ்சம் கூடி இரு நெஞ்சம் கூடி ஒரு
நேசம் வந்ததடி பெண்ணே
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி உயிர்
வென்றதடி கண்ணே
நாம் த நாம் த த ந நாம் த நாம் த ந நாம் தான தம் தம்
நாம் த நாம் த த ந நாம் த நாம் த ந நாம் தான தம் தம்
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயந்தாரா
ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை
ஒருமுறை உன்னைக் காணும் பொழுது
இரு விழிகளில் ரோஜாக் கனவு
வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை
தங்கம் வெட்கப்பட்டால்
மஞ்சள் வண்ணம் மாறும்
நாணம் கொண்ட தாலே உன் வண்ணம்
பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சு வா
கண்ணா நாம் கண்ணும் கண்ணும் கலப்போமா
காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா
அப்பப்பா இறக்கை கட்டி பரப்போமா
ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா
துணியினை கொண்டு மார்பை மறைத்தாய்
துணிவினை கொண்டு மனதை மறைத்தாய்
நேற்றோடு என்னைக் கண்டு மலர்ந்து விட்டாய்
காற்றோடு மொட்டை போல உடைந்து விட்டாய்
சிங்கம் கொண்ட பாலை வாங்கி வைப்பதென்றால்
தங்க கிண்ணம் வேண்டும் கண்ணாளா
நான் தானே உன் தங்கக் கிண்ணம் வா
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயந்தாரா
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா
என்னோடு காதல் சொல்லி நயந்தாரா
அன்பே என் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணா நம் காதல் கண்டு ஹ்ம்...
Written by: Harris Jayaraj, Vairamuthu

