album cover
Idarinum
album cover
Idarinum adlı parça {albumName} albümünün bir parçası olarak Think Music tarafından 25 Aralık 2015 tarihinde yayınlandıThaarai Thappattai (Original Motion Picture Soundtrack)
25 Aralık 2015
FirmaThink Music
BPM
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

இடரினும் எனதுரு நோய் தொடரினும்
நின்கழல் தொழுதெழுவேன்
வாழினும் சாவினும் வருந்தினும்போய் வீழினும்
நின்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
போழிள மதிவைத்த புண்ணியனே
என்னுள்ளம் கோவில்
அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா
சொல்லவா
உன்னைத் தொடும்
உண்மை அல்லவா
நீ வந்ததெங்கோ
நானும் வந்ததெங்கோ
நம்மை இங்கு ஒன்றாய்ச் சேர்த்ததே இசையே
எந்தன் முன்பு உன்னை வைத்ததே
பிறந்தது சிற்றூரில்
வாழ்வது ஓலைக்குடிலில்
இருக்கும் இவை வந்து
என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான் போல
தெளிந்த தண்ணீர் போல
ஊற்றெடுக்கும் இசை அமுதம்
எந்தன் மீது ஓடும்
நீ விரும்பும் நேரம் உனக்கிது வேண்டும்
உன் கவனம் யாவும்
பொழுது போகத் தீரும்
சிறிதே இசைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இசை என்ன
எனக்கு ஒன்றாகும்
என்னுள்ளம் கோவில்
அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா
சொல்லவா
உன்னைத் தொடும்
உண்மை அல்லவா
ஊர்கள் கூடும் திருநாளை
தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம்
ஒதுங்கி வாழ வேண்டும்
இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும் போதும்
ஊர் தெய்வம் பேசாது
சாட்சி போல பார்க்கும்
நிறைந்த எந்தன் நெஞ்சம்
திறந்திருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி
உண்மை கொண்டு வாழும்
எனக்கென்றேது உண்டு
இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
வேறு என்ன வேண்டும்
என்னுள்ளம் கோவில்
அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா
சொல்லவா உன்னை தொடும் உண்மை அல்லவா
Written by: Ilaiyaraaja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...