Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
T. M. Soundararajan
T. M. Soundararajan
Performer
P. Susheela
P. Susheela
Performer
COMPOSITION & LYRICS
Viswanathan - Ramamoorthy
Viswanathan - Ramamoorthy
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

Şarkı sözleri

என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
நான் அவள் பெயரை தினம் பாடும் குயில் அல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதைய்யா
சருகான மலர் மீண்டும் மலராதையா
கனவான கதை மீண்டும் தொடராதைய்யா
கனவான கதை மீண்டும் தொடராதைய்யா
காற்றான அவள் வாழ்வு திரும்பாதையா
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
எந்தன் மனக் கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
இன்று உனக்காக உயிர் வாழும் துணை இல்லையா
அவள் ஒளி வீசும் எழில் கொண்ட சிலை இல்லையா
அவள் வாழ்வு நீ தந்த வரம் அல்லவா
அவள் வாழ்வு நீ தந்த வரம் அல்லவா
அன்போடு அவளோடு மகிழ்வாய் அய்யா
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
Written by: Kannadasan, Viswanathan - Ramamoorthy
instagramSharePathic_arrow_out

Loading...