Krediler

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S. Janaki
S. Janaki
Performer
Pulamaipithan
Pulamaipithan
Performer
COMPOSITION & LYRICS
Pulamaipithan
Pulamaipithan
Songwriter
Shankar-Ganesh
Shankar-Ganesh
Composer

Şarkı sözleri

சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
தரரரர தரரரர தரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது
தரரரர தரரரர தரரரர
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
தரரரர தரரரர தரரரர
தரரரர தரரரர தரரரர
கை என்றே செங்காந்தழ் மலரை
நீ சொன்னால் நான் நம்பவோ ஆஆஆஆ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம் ஆஆஆஆ
பொய் கொஞ்சம் ஆஆஆஆ
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர்
தமிழ் சங்கத்தில் தரரரர தரரரர தரரரர
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித்தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா ஆஆஆஆ
கொஞ்சத் தா ஆஆஆஆ
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர்
தமிழ் சங்கத்தில் தரரரர தரரரர தரரரர
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது ஆஆஆஆ
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும் ஆஆஆஆ
மெய் தொட்டும் ஆஆஆஆ
காமத்தில் தூங்காத விழியும்
சந்தித்தேன் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
தரரரர தரரரர தரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு
என் முன்னே யார் வந்தது
தரரரர தரரரர தரரரர
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
தரரரர தரரரர தரரரரரரர
Written by: Pulamaipithan, Shankar-Ganesh
instagramSharePathic_arrow_out

Loading...