Krediler
PERFORMING ARTISTS
Hariharan
Vocals
COMPOSITION & LYRICS
Subramania Bharati
Lyrics
A.R. Rahman
Composer
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
Producer
Şarkı sözleri
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடி
சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடி
வாலைக் குமரியடி கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் எதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடி
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடி இது பார் கன்னத்து முத்தமொன்று
Written by: A. R. Rahman, Subramania Bharati

