album cover
album cover
Mannukkulla adlı parça {albumName} albümünün bir parçası olarak Independent tarafından 21 Ağustos 2026 tarihinde yayınlandıMannukkulla - Single
21 Ağustos 2026
FirmaIndependent
BPM151
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

பல்லவி
மண்ணுக்குள்ள பூக்கும் பூவும் மெதுவாக வானம் பாக்குதே
நெஞ்சுக்குள்ள பூக்கும் பூவும் புதுசே
கண்ணுக்குள்ள ஊரும் கனவு அடியோடு ஆள மாத்துதே
சொல்லுக்குள்ள மயங்கும் மனசும் சுகமே
ஓ .. ஓடயில ஓடும் நீரும் அழகாக கோலம் போடும்
ஜாடையில பேசும் போது இதமே இதமே
கூட்டுக்குள்ள கூவும் குயிலும் ஒயிலாக ஆடும் மயிலும்
வானத்துக்கு சேதி சொல்ல மழையும் வருமே
அடி உன் நெனப்புல பரிதவிப்புல மெழுகாக / மெழுகா நான் உருகுறேன்
கொடியே என் ..வானில் பூ மழை
Chorus…
சரணம்
நீ சிறுவாணி நீரில் நீந்தும் நேரம்
கள்ள களவாணி உன்னால் மனசும் பறிபோனதே
வானவில்லு வானத்தை பிரிஞ்சி சரிஞ்சி வளஞ்சு ...அட என் மடியில விழுந்ததே
காதல் வளருதே
துள்ளி துள்ளி வந்திந்த கள்ளி
அள்ளி அள்ளி நெஞ்சத்த அள்ளி
சொல்லி சொல்லி ஆசையா சொல்லி
பூவாகும் பொன்னே, பொன்னாகும் பூவே
வள்ளி வள்ளி, சக்கர வள்ளி
அல்லி அல்லி நேசப்பூ அல்லி
மல்லி மல்லி ஜாதி மல்லி
பூவாகும் பொன்னே, பொன்னாகும் பூவே
வீசும் காத்து ஓடும் மேகத்துல
வீசும் காத்து ஓடும் மேகத்துல
தூது ஒன்னு விடுதே
அத அறியாமலே புரியாமலே தடுமாறுது மனசொண்ணு
அறியாமலே புரியாமலே தடுமாறுது மனசொண்ணு
பல்லவி
மண்ணுக்குள்ள பூக்கும் பூவும் மெதுவாக …
நெஞ்சுக்குள்ள பூக்கும் பூவும் புதுசே
கண்ணுக்குள்ள ஊரும் கனவு அடியோடு ஆள மாத்துதே
சொல்லுக்குள்ள மயங்கும் மனசும் சுகமே
ஓ .. ஓடயில ஓடும் நீரும் அழகாக கோலம் போடும்
ஜாடையில பேசும் போது இதமே இதமே
கூட்டுக்குள்ள கூவும் குயிலும் ஒயிலாக ஆடும் மயிலும்
வானத்துக்கு சேதி சொல்ல மழையும் வருமே
அடி உன் நெனப்புல பரிதவிப்புல மெழுகாக / மெழுகா நான் உருகுறேன்
கொடியே என் ..வானில் பூ மழை
குளிர் பனியும் பூவும் உறவாடிடும்
கனியில் சுவையும் தினம் கூடிடும்
கடலில் அலையும் விளையாடிடும்
பூவாகும் பொன்னே, பொன்னாகும் பூவே
காலையில் சூரியன் ஒளி வீசிடும்
சாமத்தில் சந்திரன் குளிர் சேர்ந்திடும்
வானவில் வானத்தில் வந்தாடிடும்
பூவாகும் பொன்னே, பொன்னாகும் பூவே
Written by: Kaushik Ganesan, Vijay Ragavan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...