音乐视频

#Anbu - Thavamendri Video Song | Bala, Deepu | Vidyasagar, Dalapathiraj
观看 {artistName} 的 {trackName} 音乐视频

精选于

制作

出演艺人
Hariharan
Hariharan
表演者
作曲和作词
Vidyasagar
Vidyasagar
作曲
Thamarai
Thamarai
词曲作者

歌词

தவம் இன்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவம் இன்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன் நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் தவம் இன்றி கிடைத்த வரமே-ஓ-ஓ இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஓ-கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற வேண்டாமா வேண்டாமா கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பகல் எல்லாம் இரவாகி போனால் என்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன தவம் இன்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் தவம் இன்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே நான் வாழ்கிறேன் நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன் நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் தவம் இன்றி கிடைத்த வரமே-ஓ-ஓ இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Writer(s): Thamarai, Vidyasagar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out