制作

出演艺人
Pradeep Kumar
Pradeep Kumar
表演者
作曲和作词
Govind Vasantha
Govind Vasantha
作曲家
Karthik Netha
Karthik Netha
词曲作者

歌词

நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய் பேச
போகாதொரு ஆழம்தேடி நீந்தி-நீந்தி மூழ்கி போவேன்
வாழாதொரு வாழ்வை தீண்டி தெளி-தெளி-தெளி-தெளி தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே அட பித்தேறி சத்தேறி சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில்-இப்போதில்-இப்போதில் எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே இப்போதில்-இப்போதில்-இப்போதில் எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில்-இப்போதில்-இப்போதில் எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க-கேட்க ஓசை மீறி கேட்கிறதே
ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய்
நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல்
யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மை போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே
தாய் தூங்கும் அழகை பார்த்து தான் தூங்கும் மழலை போலே
பேரன்பை போலி செய்வேனே நிறுத்தாமல்
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது-இப்போது-இப்போது கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது-இப்போது-இப்போது ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடி பூத்தேன் இப்போது-இப்போது-இப்போது நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத வேத வாத மோகம் மறைகிறதே
நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல் போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல்
பேரலை மேலே விளையாடும் காகம் போலே
யார் எனை துணிவாய் படைத்தார்
சீறும் புலியை பார்த்தே சிரிக்கின்ற சிசுவை போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே உருவாகும் வளையல் போலே
நான் வாழ்ந்த அதிர்வை கொடுப்பேனே கதறாமல்
வாகாய்-வாகாய் வாழ்கிறேன் பாகாய்-பாகாய் ஆகிறேன்
தோதாய்-தோதாய் போகிறேன் தூதாய்-தூதாய் ஆகிறேன்
போதாய்-போதாய் பூக்கிறேன் காதாய்-காதாய்க் கேட்கிறேன்
ஆரோ ஆரீராரீரோ
தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆரீராரீரோ
தாய் போல் பாடுதே
ஆரோ ஆரீராரீரோ
ஆரோ
Written by: Govind Vasantha, Karthik Netha
instagramSharePathic_arrow_out

Loading...