歌词
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும் ஆ
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில் நீ முதல் கனவு
நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே
ஒலி இல்லா உலகத்தில் இசையாக நீயே மாறி
காற்றில் வீசினாய், காதில் பேசினாய்
ஓ மொழி இல்லா மௌனத்தில் விழியாலே வார்த்தை கோர்த்து
கண்ணால் பேசினாய், கண்ணால் பேசினாய்
நூறு ஆண்டு உன்னோடு வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு
நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் உறக்கங்களில் நீ முதல் கனவு
நீ வேண்டுமே
இந்த பிறவியை கடந்திட நீ போதுமே
Written by: Deepak Chander, Thamarai