歌词
நீ என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை
உன்னோடு நானும் வாழ ஏங்க சொல்லாமல்
காதல் தாக்குதே
என் கண்கள் உன்னைத் தேடுதே
கண்ணாடி போலே கீறுதே
என் ஆவல் எல்லை மீறுதே
நீ... நீ பகல் கனவா
என்னைக் கொல்லும் நினைவா
நான் குழம்புகிறேன்
ஒரு படபடப்பில் கொஞ்சம் துடிதுடிப்பில்
கொஞ்சம் நொறுங்குகிறேன்
அடி சிதறுகிறேன்
ஒரு அலைபோலவே
என் தோளிலே நீ சாயும்
நேரத்தில் தாளாகிப் போகிறேன்
பெண்ணே பெண்ணே
உந்தன் பின்னே நடக்கின்றேன் கிடக்கின்றேன்
உன் நிழலைப் போலவே உன்னைக் கண்டால்
எந்தன் நெஞ்சம் நாய்க்குட்டிப் போலத் தாவுதே
என் காதல் உந்தன் காதில் சேருமோ
உன் சுவாசக் காற்று என்னைத் தீண்டுமோ...
இந்த இதயமொரு சிறு ஊஞ்சலடி
அது உன் திசையில் தினம் ஆடுதடி
தினம் அலைபாய்ந்தே
தேடுதே ஓ... ஹோ...
கை ஜாடை பார்த்து காதல் வந்ததே
கண் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே
Written by: Na Muthukumar, Yuvan Shankar Raja