制作

出演艺人
K.S. Chithra
K.S. Chithra
表演者
Sujatha
Sujatha
表演者
Vidyasagar
Vidyasagar
领唱
作曲和作词
Vidyasagar
Vidyasagar
作曲
Vairamuthu
Vairamuthu
词曲作者

歌词

தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
ஹோ
ஹோ
நட்சத்திரப் புள்ளி வானம் எங்கும் வைத்து
நிலவு உன்னை கோலம் போட அழைத்திடும்
நீ இருக்கும் இடம் வேடந்தாங்கல் என்று
பறவைகள் மனதுக்குள் மகிழ்ந்திடும்
பெண்பூவே நீயும் ஆட
முகில்கள் ஊஞ்சல் போடும்
உலாவும் தென்றல் வந்து
உன் ஊஞ்சலை அசைத்தே போகும்
பகலினில் முழுவதும் வெயிலிலே
உன்னைச் சுட்டு வருத்திய வானம் அது
இரவினில் முழுவதும் அதை எண்ணியே
பனித்துளி சிந்தியே அழுகிறது
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
வாழ்வின் திசை மாறும், பாதைகளும் மாறும்
நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே
சொந்தம் நூறு வரும்
வந்து வந்துப் போகும்
என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே
உன் பாதம் போகும் பாதை
மண்ணுக்கு சந்தோஷங்கள்
உன்னோடு ஓர் ஓர் நிமிஷம்
உயிருக்கு ஆனந்தங்கள்
பூக்கள் எல்லாம் உன்னைத் தொட தவமிருக்கும்
நீயும் தொட சருகுக்கும் உயிர் பிறக்கும்
வானவில்லும் வந்து உனக்கு குடை பிடிக்கும்
எங்களுக்கும் அதற்குள்ளே இடம் இருக்கும்
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
Written by: Vairamuthu, Vidyasagar
instagramSharePathic_arrow_out

Loading...