歌词
பெத்தமனசு பித்தாகிதான்
போனது போனதம்மா
இந்த பிள்ளைமனசு கல்லாகத்தான்
ஆனது ஆனதம்மா
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தான்
இவர் கண்ணீர் சிந்தும் கூட்டம் தான்
பெத்தமனசு பித்தாகிதான்
போனது போனதம்மா
இந்த பிள்ளைமனசு கல்லாகத்தான்
ஆனது ஆனதம்மா
மகானாய் பிறந்தது ஒரு பாவம்
இவனை மடிமேல் சுமந்தது பெறும் பாவம்
இவனால் ஊருக்கு எது லாபம்?
இங்கு எல்லாம் இவர்களின் விதியாகும்
நம்பித்தான் நம்பித்தான் என்ன ஆச்சு?
மனம் வெம்பித்தான் வெம்பித்தான் நொந்துப்போச்சு
சொந்தமும் பந்தமும் வெட்டிப்பேச்சு
பெத்த பிள்ளையோ காசுக்கு விலைபோச்சு
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தான்
இவர் கண்ணீர் சிந்தும் கூட்டம் தான்
பெத்தமனசு பித்தாகிதான்
போனது போனதம்மா
இந்த பிள்ளைமனசு கல்லாகத்தான்
ஆனது ஆனதம்மா
கால்கள் முன்னே நடக்குதம்மா
இவர் வாழ்க்கை பின்னே கிடக்குதம்மா
காற்றினில் பறக்கும் பஞ்சினைப் போல்
இவர் கனவுகள் யாவும் கலைந்ததம்மா
சொல்லிக்கொள்ள இவருக்கு சொந்தம் இல்லையே
பெற்ற சொந்தம் தனை அறுத்தது சொந்தப் பிள்ளையை
உப்புக்கல்லை வைரம் என்று நம்பித்தானே
நல்ல உள்ளம் இங்கு துடிக்குது புள்ளி மானே
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தான்
இவர் கண்ணீர் சிந்தும் கூட்டம் தான்
பெத்தமனசு பித்தாகிதான்
போனது போனதம்மா
இந்த பிள்ளைமனசு கல்லாகத்தான்
ஆனது ஆனதம்மா
ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் தான்
இவர் கண்ணீர் சிந்தும் கூட்டம் தான்
பெத்தமனசு பித்தாகிதான்
போனது போனதம்மா
இந்த பிள்ளைமனசு கல்லாகத்தான்
ஆனது ஆனதம்மா
அம்மா, ஆனது ஆனதம்மா
Written by: Kalidasan, Sirpy