歌词
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம்தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...
வா வா ரசித்திருக்க...
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...
வா வா ரசித்திருக்க...
செடியிலே பூ பறிக்க...
வேருக்கு விரல் வலிக்க...
வலியைத்தான் எதில் மறைக்க...
வசனம் நீ படிக்க...
யே அக்கா அக்கா ஏலக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தள்ளி போன பித்தக்கா
ஆட்டம் போட்டு பாடு சொக்கா
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...
வாவா ரசித்திருக்க...
பிள்ளை அழகு பிறையும் அழகு...
உலகில் எல்லாம் அழகு...
நீயும் அழகு. நிலவும் அழகு...
நாளைக்கு நான் அழகு...
ஒன்றை எடுத்தால் ஒன்றை கொடுக்கும்
தெய்வத்தின் தீர்ப்பு இது
வாழ்க்கை என்ன மளிகை கடையா?
கொடுத்து எதை வாங்குவது?
வானம் உனக்காக இந்த வாழ்க்கை உனக்காக
கடவுள்... நீ தானா நான் வரம் தான் கேட்டேனா
யாருக்கு கவலையில்ல
அத பத்தி கவலையில்ல
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...
வா வா ரசித்திருக்க...
அழகு என்றால்... அழகு என்றால்...
அகத்திலே இருப்பது தான்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...
உலகமும் சொல்வதுதான்
மழையின் சத்தம் மழலை முத்தம்
அத்தனைக்கும் ஆசை படு
ம்... ஆசை வந்தால் அவஸ்தை வருமே
அறிவுரையை மாற்றி விடு
கண்ணில் இமை சுமையா
பூங்காற்றுக்கு இலை சுமையா
அடடா உன் பேச்சு
என் காதுக்கு சுமை தானே
பாடவா புது பாட்டு
மயங்குறேன் அத கேட்டு
வெண்ணிலா சிறகடிக்க...
வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...
வா வா ரசித்திருக்க...
செடியிலே பூ பறிக்க...
வேருக்கு விரல் வலிக்க...
வலியைத்தான் எதில் மறைக்க...
வசனம் நீ படிக்க...
யே அக்கா அக்கா ஏலக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தள்ளி போன பித்தக்கா
ஆட்டம் போட்டு பாடு சொக்கா
Written by: Pa Vijay, Sagar Vidya


