制作

出演艺人
Mahathi
Mahathi
表演者
Rahul Raveendran
Rahul Raveendran
表演者
Abirami Audio
Abirami Audio
表演者
作曲和作词
S.P.Devarajan
S.P.Devarajan
词曲作者
制作和工程
Abirami Audio Recording Private Limited
Abirami Audio Recording Private Limited
制作人

歌词

ஆலயம் வந்து
ஆலயம் வந்து அன்புடன் பணிந்தோம்
அருள்வாய் சாய் நாதா
ஆரத்தியேற்றி அன்புடன் காட்டிட
மகிழ்வாய் குருதேவா
     
சேயிடம் இனிய செம்மொழி பேசும்
தாய் போல நீயிருந்தாய்
நோய்க்ளை நீக்கி காத்திடு எம்மை
குருவே நீ மருந்தாய்
அடியவர் கேடுகள் அன்புடன் நீக்கி
அளிப்பாய் தரிசனத்தை
அவர் தம் சுமைகளை நீயேசுமந்து
அளிப்பாய் அநுக்ரகத்தை
     (ஆலயம்)
பூக்கள் தூவிய படுக்கையின் மேலே
உறங்கிடும் குருதேவா
புரிவோம் சிறிய பூஜைகள் உமக்கு
அருள்வீர் சாய்நாதா
ஆரத்தியால் எம் ஐம்புலன் யாவும்
ஆனந்தம் பெறுகின்றதே
அத்தர் பரிமள கந்தம் படைத்தோம்
அமைதியை தருகின்ரதே
     (ஆலயம்)
சாயி உன் பாதத்தை பிரிகின்ற நேரம்
வேதனை எமைத் தாக்கும்
ஆயினும் உந்தன் அநுமதி தந்தால்
ஆசிகள் இல்லம் சேர்க்கும்
இரவினில் தரிசனம் செய்பவரெல்லாம்
வைகறையில் வருவோம்
கரங்களை கூப்பி கண் துயிலுமுனை
எழுப்பிடும் குரல் தருவோம்
     (ஆலயம்)
Written by: S.P.Devarajan
instagramSharePathic_arrow_out

Loading...