制作

出演艺人
S. P. Balasubrahmanyam
S. P. Balasubrahmanyam
声乐
Deva
Deva
声乐
Vairamuthu
Vairamuthu
表演者
Nagma
Nagma
演员
Rajinikanth
Rajinikanth
演员
作曲和作词
Deva
Deva
作曲

歌词

நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயமுள்ள ரேட்டுக்காரன்
நல்லவங்க கூட்டுக்காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக்காரன்
கம்பெடுத்தா வேட்டைக்காரன்
எழியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அட அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயமுள்ள ரேட்டுக்காரன்
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு
ஜும்த லக்கடி ஜும்தா
ஹே ஜும்த லக்கடி ஜும்தா
ஆஹா... ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருத்தாச்சு
பஸ்ஸ எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்தில
இருப்போம் சாலைகளின் ஓரத்தில
அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க, ஹாங்
அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க
நீங்க கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு
எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
நியாமுள்ள ரேட்டுக் காரன்
ஆ... அம்மா தாய்மாரே
ஆபத்தில் விட மாட்டேன்
ஜுமுக்கு ஜுக்குடு ஜிம்கா
ஹே ஜுமுக்கு ஜுக்குடு ஜிம்கா
ஏ... அம்மா தாய்மாரே
ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ
மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா
உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா
உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும்
அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும்
இந்த ஆட்டோக்காரன் அறிவான்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
நியாயமுள்ள ரேட்டுக்காரன்
நல்லவங்க கூட்டுக்காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக்காரன்
கம்பெடுத்தா வேட்டைக்காரன்
எழியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா
நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அஜுக்கு இன்னா அஜுக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
Written by: Deva, Sirpy, Vairamuthu Ramasamy Thevar
instagramSharePathic_arrow_out

Loading...