制作

出演艺人
Vijay
Vijay
表演者
Hariharan
Hariharan
声乐
作曲和作词
S. A. Rajkumar
S. A. Rajkumar
作曲
Vairamuthu
Vairamuthu
词曲作者

歌词

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன்
கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தம் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளவோ
மானிட பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன்
கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
ஜூலை மாதம் பூக்கும் கொன்றை பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் சொர்க்கம் காட்டுதே
தாஜ்மஹாலின் வண்ணம் மாற கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன்
கண்கள் கண்கள் மட்டும் காண வில்லையே
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
கன்னி உந்தன்
கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
Written by: S. A. Rajkumar, Vairamuthu
instagramSharePathic_arrow_out