歌词
Hey don't dont feel yaar
Okay
Sound
பொன்மகள் வந்தாள்(நான் தான்டா)
பொருள் கோடி தந்தாள்(வெச்சுக்கோ)
பூமேடை வாசல் பொங்கும் தேனாக(அப்புடி போடு)
கண்மலர் கொஞ்சம் (ஆஹா)
கனிவோடு என்னை(அப்புறம்)
ஆளாக்கினாள் அன்பிலே ஏஏ(சாப்புடு)
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும்
இன்பம் பொங்குது தன்னாலே
போக்கிரி ராஜா போதுமே தாஜா
போக்கிரி ராஜா போதுமே தாஜா
பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து
வம்புகள் பண்ணாதே
வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
வெட்டும் விழி பார்வையினால் ஒட்டுறவாய் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஓடலாமா
கையை தொட்டு பேச மட்டும் தடை போடலாமா?
ஏம்மா ஏம்மா ஏம்மா
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
அரரரே what சக்தி I'm in mood yaar
ஆஆஆ
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா
கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம்
கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா
கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹா ஹா ஹா
அதில் நான் சக்ரவத்தியடா
ஹே ஹே
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முருகா
அய்யய்யோ
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
அங்க என்னடா romance
பாவையின் பதம் காண நாணமா
பாவையின் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
தகதக தகதகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட
தகதக தகதகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா
சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
Written by: Ilaiyaraaja