歌詞
மெதுவா மெதுவா தொடலாமா?
என் மேனியிலே கை படலாமா?
படலாமா?
வெட்கம் இப்போது வரலாமா?
நீ விலகி செல்வதும் சரிதானா?
சரிதானா?
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா? நினைவில்லையா?
இங்கு வேறொரு புள்ளிமான் கிடைக்கலையா? கிடைக்கலையா?
காட்டுக்குள்ளே இந்த நாடகமா?
காதல் என்றால் இந்த அவசரமா?
அவசரமா?
வெட்கம் இப்போது வரலாமா?
நீ விலகி செல்வதும் சரிதானா?
சரிதானா?
குளிர்ந்த காற்றாய் மாறட்டுமா? மாறட்டுமா?
உன் கூந்தலில் நடனம் ஆடட்டுமா? ஆடட்டுமா?
கொல்லும் கண்களை வெல்லட்டுமா?
கோடி கதைகள் சொல்லட்டுமா?
சொல்லட்டுமா?
மெதுவா மெதுவா தொடலாமா?
என் மேனியிலே கை படலாமா?
படலாமா?
இதயம் முழுவதும் எனக்கில்லையா? எனக்கில்லையா?
இன்பமும் துன்பமும் உனக்கில்லையா? உனக்கில்லையா?
நாளையும் மணமாக்கல் நாமில்லையா?
அது நடக்கும்வரை மனம் பொறுக்கலையா?
வெட்கம் இப்போது வரலாமா?
நீ விலகி செல்வதும் சரிதானா?
சரிதானா?
மெதுவா மெதுவா தொடலாமா?
என் மேனியிலே கை படலாமா?
படலாமா?
Written by: K. V. Mahadevan, Kannadasan


