歌詞

முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் கடிகாரம் சொல்லாத நொடி நேரம் உண்டாக்கி அதில் ஏறி காதல் சொல்கின்றேன் உன்னை பார்த்தால் அணில் ஆகிறேன் விளையாட மணல் ஆகிறேன் முகையே... இதமே அறியா ஒரு பாதி வாலிபம் கடந்தேன் இதழின் மழையில் அந்த பாவம் யாவையும் களைந்தேன் முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் யாரோ... உரையாடும் போதும் நீ என்றே பார்க்கிறேன் வீட்டில்... உன்னை பொம்மையாக்கி என் கைகள் கோர்க்கிறேன் நாளும்... உன் மூச்சிழுத்து நான் வாழ பார்க்கிறேன் உன்னை கொண்டாடும் ஒரு சொல் ஆகிறேன் விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே ...யே... யே... ஓடும்... உன் கால் தடங்கள் ஒவ்வொன்றாய் ஏறினேன் ஏனோ... ஒவ்வொன்றின் மீதும் ஒரு நிமிடம் வாழ்கிறேன் நீயாய்... என் பேர் உதிர்த்தால் கொண்டாடி தீர்க்கிறேன் நீராய்... உன் தோள் குதிக்க மன்றாடினேன் விழி மூடி விழும் போதிலும் விலகாதே உந்தன் ஞாபகம் விழையே ...யே... யே...
Writer(s): Radhan, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out