積分
演出藝人
Kabilan
演出者
G. V. Prakash Kumar
演出者
Sid Sriram
演出者
詞曲
Kabilan
詞曲創作
G. V. Prakash Kumar
作曲
歌詞
உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசம் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே
நீல வானம் நீயடி
உனை நீங்கினால் உயிர் ஏதடி?
நீதானே... யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே... ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
உன்னோடு நான்
என்னோடு நீ
ஒன்றாகவே உயிர் வாழ்வோமே
தாயாக நீ
தனியாக நான்
கண்ணோடு நீ
கலங்காமல் நான்
என் தாயின் இரண்டாம் பாகம் கண்டேன்
எந்தன் காதல் பெண்ணாலே
அழகே அழகின் முதலே
என் தேவை யாவும் இந்த மண்ணில் கண்டேன்
பெண்ணே உன்னாலே
நிலவே நிலவின் பகலே
உன்னாலே... ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
தண்ணீரிலே
விண்மீன்களாய்
உன் கண்களை
நான் காண்கிறேன்
ஆகாயம் நீ
அதிகாலை நான்
வீட்டோடு நீ
விளையாட நான்
வேறென்னே வேண்டும் பெண்ணே
நெஞ்சில் உள்ள ஆசை என்னவோ
உலகம் முழுதும் உனதே
கைநீட்டும் தூரம் எல்லாம்
உன்னை மட்டும் தொட்டு கொள்ளவே
மறுநாள் கனவும் உனதே
உன்னோடு வாழும்
இந்த காலம் போதும் பெண்ணே
உன் வாசம் தீண்டும்
இந்த நாட்கள் போதும் கண்ணே
நீயும் நானும் போலவே
இந்த பூமியில் இனி யாரடி
நீதானே... யாரும் இல்லா நெஞ்சில்
தேடி வந்த சொந்தம் நீதானே
உன்னாலே... ஊமை நெஞ்சம் இன்று
ஓசை மின்னல் போல ஆனேனே
Written by: G. V. Prakash Kumar, Kabilan

