積分
演出藝人
A.R. Rahman
聲樂
Vijay Yesudas
聲樂
Manjima Mohan
演員
Silambarasan
演員
詞曲
A.R. Rahman
作曲
Pavendhar Bharathidhasan
詞曲創作
製作與工程團隊
A.R. Rahman
製作人
歌詞
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அவளும் நானும், தவமும் அருளும்
அவளும் நானும், வேரும் மரமும்
ஆலும் நிழலும், அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும், அவளும் நானும்
அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும், அளித்தலும் புகழும்
மீனும் புனலும், விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும், வேலும் கூரும்
ஆறும் கரையும், அம்பும் வில்லும்
பாட்டும் உரையும், நானும் அவளும்
நானும் அவளும், உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும், பூவும் மணமும்
நானும் அவளும், உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும், பூவும் மணமும்
அவளும் நானும்(அவளும் நானும்), தேனும் இனிப்பும்
அவளும் நானும்(அவளும் நானும்), சிரிப்பும் மகிழ்வும்
அவளும் நானும், திங்களும் குளிரும்
அவளும் நானும்(அவளும் நானும்), கதிரும் ஒளியும்
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும், அலையும் கடலும்
அவளும் நானும், தவமும் அருளும்
அவளும் நானும், வேரும் மரமும்
ஆலும் நிழலும்(அவளும் நானும்), அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்(அவளும் நானும்), அவளும் நானும்
அவையும் துணிவும்(அவளும் நானும்), உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்(அவளும் நானும்), அளித்தலும் புகழும்
அவளும் நானும், அமுதும் தமிழும்
அவளும் நானும்(அவளும் நானும்), அமுதும் தமிழும்
Written by: A. R. Rahman, Pavendhar Bharathidhasan