積分
演出藝人
A.R. Rahman
聲樂
Niranjana Ramanan
聲樂
Keerthana Vaidyanathan
聲樂
Ananda Krishnan
演員
Brigida Saga
演員
Chandru
演員
Priyanka Ruth
演員
Robo Shankar
演員
Radhakrishnan Parthiban
演員
S. Varalakshmi
演員
Sneha Kumar
演員
詞曲
A.R. Rahman
作曲
歌詞
பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே
சாபங்கொடுத்திட லாமோ விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே
சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத் திவிசு வாசம் எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே
நல்லவர் தம்மைத்தள் ளாதே அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
நல்லவர் தம்மைத்தள் ளாதே அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே
நல்ல வழிதனை நாடு எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
நல்ல வழிதனை நாடு எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே
Written by: A. R. Rahman, Radhakrishnan Parthiban