Deva 熱門歌曲
類似的歌曲
積分
演出藝人
Deva
演出者
Mano
聲樂
Kasthuri Raja
演出者
S. Janaki
聲樂
Saravanan
演員
Swarna
演員
詞曲
Deva
作曲
Kasthuri Raja
詞曲創作
歌詞
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமனேத் தழுவிக் கட்டிக்கணும்
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
நாள் தோறும் காத்திருந்தேன்
நானே தவமிருந்தேன்
ஒனக்காக தான்
கண்ணே ஒனக்காக தான்
நான் கூட மனசுக்குள்ள
ஆசை வளத்துகிட்டேன்
ஒன்னை பார்த்துத்தான்
மாமா ஒன்னை பார்த்துத்தான்
அட முத்துன கிறுக்கு
மொத்தமும் தெளிய மொறையிடலாமோ
சுத்துற கண்ணுல
சிக்குன என்னை சிறையிடலாமோ
எத்தனை நாள் இப்படி நான் ஏங்குறது
பொட்டு வைச்சு
பூ முடிக்கும் நாளிருக்கு ஓ ஓ ஓ
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
ஊர் தூங்கும் வேளையிலும்
நான் தூங்க போனதில்லை
ஒன்னால தான்
கண்ணே ஒன்னால தான்
யார் பேச்சு கேட்டாலும்
என் காதில் கேட்பதெல்லாம்
ஒன் பேரு தான்
நித்தம் ஒன் பேரு தான்
ஏய் இத்தனை நெனப்பு என் மேலே இருந்தும்
எட்டி போகலாமோ ஓ
கட்டுப்பாடிருந்தும்
கட்டிக்கும் முன்னே
ஒட்டிகொள்ளலாமோ
முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்
சத்தமிட்டால் உன் நிலமை
என்னாகும் அஹ் ஹூம்
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
மாமென் கிட்ட பேச போறேன்
மணிக்கணக்கா
தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
அந்த இந்திரன் சந்திரனும்
மாமென் வந்தா எந்திரிச்சே நிக்கணும்
அந்த ரம்பையும் ஊர்வசியும்
மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்
நான் காத்தாகி ஊத்தாகி
மாமனேத் தழுவிக் கட்டிக்கணும்
தூதுவளை இலை அரைச்சி
தொண்டையில தான் நனைச்சி
நானும் கூட பேச போறேன்
மணிக்கணக்கா
ஆ தூண்டாமணி விளக்கை
தூண்டி விட்டு எரியவச்சி
ஒன் முகத்தை பார்க்க போறேன்
நாள் கணக்கா
Written by: Deva, Kasthuri Raja