積分

演出藝人
Shankar Mahadevan
Shankar Mahadevan
聲樂
Tabu
Tabu
演員
詞曲
A.R. Rahman
A.R. Rahman
作曲
Vairamuthu
Vairamuthu
作詞
製作與工程團隊
A.R. Rahman
A.R. Rahman
製作人

歌詞

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா? மௌனமா?
அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

இதயம் ஒரு கண்ணாடி, உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்ட கயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழி விளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்?
என்ன சொல்லப் போகிறாய்?
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா?
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌனமா? மௌனமா?
விடியல் வந்த பின்னாலும், விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி, உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா? சாவா?
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
நியாயமா? நியாயமா?
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
மௌனமா? மௌனமா?
என்ன சொல்லப் போகிறாய்
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...