歌詞
சிக்கி முக்கி கற்கள்l
கண்ணானதே!
உக்கி போட்டு பொய்கள்
தள்ளாடுதே!
மெல்ல மெல்ல ஆசை
தீமூட்டுதே
பற்றி கொண்ட உள்ளம்
கொண்டாடுதே
தூவனமே.....
பூத்தூறினாலும்
தீராதம்மா!
தீராமலே......
என் தேடல் என்றும்
ஓயாதம்மா!
காலாற செல்வேன்
கடைத்தெருவில்
தேநீர் உண்டு
கையோடு என்னை
அழைத்து செல்ல
காற்றும் உண்டு
Charanam
வெறிக்கும் பார்வையோடு
விழுங்கும் கண்களை
துரத்தி ஓரம் போடு
துளிர்க்கும் ஆசையோடு
ஆ......
தனித்து சாலை போடு
மின்னும் வானவில்லிலே
கொள்ளாத வண்ணம் நானா
காகிதங்களில்
சொல்லாத பாடம் நானா
காற்றோடு என்னை
இணைத்துக் கொள்ள
மூச்சும் உண்டு
நேற்றோடு என்னை
பிரித்துக் கொள்ள
நாளை உண்டு
Written by: Ahamed Shyam, R Sanjay