積分

演出藝人
Shankar Mahadevan
Shankar Mahadevan
演出者
Anuradha Sriram
Anuradha Sriram
演出者
詞曲
Vairamuthu
Vairamuthu
詞曲創作

歌詞

தின்னாதே என்னை தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே என்னை தின்னாதே
சீ சீ சீ சீ சீ சீ சீ சீன்டாதே என்னை சீன்டாதே
தின்னுவதை விடவும் இங்கு தின்னபடுதல்
இன்னும் இன்பம் அல்லவா அல்லவா
சீன்டாதே என்னை சீன்டாதே
பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்
முந்தானை பூவாசம் காட்டி விட்டாயே
ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்
பூ மீது petrol'லை ஊற்றிவிட்டாயே
பூவுக்குள்ளே தீ பிடித்தால் கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்
சுட சுட குடித்து விடு தீர்ந்த பிறகும் தேன் சுரக்கும்
பார்வை என்னும் ஈட்டி போட்டு
கொன்று என்னை கூறு போட்டு
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைபவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே என்னை தின்னாதே
சீன்டாதே என்னை சீன்டாதே
ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே
சுவையாறு என்பார்கள் சுவை ஏழு என்பேன் நான்
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்து விட்டாரே
அ... குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும்
வண்டு விழியில் என்னை கொன்று
சுண்டு விரலில் துண்டு செய்து
மார்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே ஓ தின்னாதே
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே
ஜோடி கண்ணில் என்னை கொத்தி
ஜோடி மார்பில் என்னை குத்தி கொன்றவளே
தின்னாதே என்னை தின்னாதே
தின்னாதே... தின்னாதே
Written by: Vairamuthu
instagramSharePathic_arrow_out

Loading...