Music Video

Thiruvilaiyaadal Aarambam Movie Songs | Vizhigalil Vizhigalil Video Song | Dhanush | Shriya Saran
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Harish Raghavendra
Harish Raghavendra
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Viveka
Viveka
Songwriter

Lyrics

விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே ஒரு நாள் வரைதான் என நினைத்தேன் பல நாள் தொடரும் வலி கொடுத்தாய் காதல் என் காதில் சொல்வாய் காதல் என் காதில் சொல்வாய் விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் சாலையில் நீ போகையில மரமெல்லாம் கூடி முணுமுணுக்கும் காலையில் உன்னை பார்ப்பதற்கு சூரியன் கிழக்கில் தவமிருக்கும் யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி ஒரு கார்பன் கார்டு என கண்ணை வைத்து காதலை எழுதி விட்டாய் அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே எங்கே ஓடுகிறாய் போகாதே அடி போகாதே என் சுடிதார் சொர்கமே நீ போனாலே நீ போனாலே என் வாழ்நாள் சொற்பமே விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் பூவிலே செய்த சிலை அல்லவா பூமியே உனக்கு விலையல்லவா தேவதை உந்தன் அருகினிலே வாழ்வதே எனக்கு வரமல்லவா மேகமாய் அங்கு நீயடி தாகமாய் இங்கு நானடி உன் பார்வை தூறலில் விழுந்தேன் அதனால் காதலும் துளிர்த்ததடி அந்த காதலை நானும் மறுநொடி பார்த்தேன் மரமாய் அசையுதடி இன்றோடு அடி இன்றோடு என் கவலை முடிந்ததே ஒரு பெண் கோழி நீ கூவித்தான் என் பொழுதும் விடிந்ததே எனக்குள் என்னையே ஒளித்து வைத்தாய் சின்னஞ்சிறு சிரிப்பினில் சிதறடித்தாய் சிதறிய இதயத்தை திருடி கொண்டாய் யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே உன்பேரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே ஒரு நாள் வரைதான் என நினைத்தேன் பல நாள் தொடரும் வலி கொடுத்தாய் காதல் என் காதில் சொல்வாய் காதல் என் காதில் சொல்வாய்
Writer(s): D Imman, Viveka, Samyu Mohan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out