Lyrics

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா? என்னென்று நான் சொல்ல வேண்டுமா? பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை ஏன்னென்று நான் சொல்லாகுமா? ஏனென்று நான் சொல்ல வேண்டுமா? நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார கிண்ணம் அலை போல மின்னும் நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்காலச் சின்னம் உயிராக மின்னும் துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா துவண்டு விழும் கொடி இடையால் துவண்டு விழும் கொடி இடையால் விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அவளோ சென்றேன்... ஹ்ம்ம் கண்டேன்... ஹ்ம்ம் வந்தேன்... பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா? என்னென்று நான் சொல்ல வேண்டுமா? நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன் நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை சென்றேன்... ஹ்ம்ம் கண்டேன்... ஹ்ம்ம் வந்தேன்... பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
Writer(s): Manayangath Subramanian Viswanathan, Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out