Lyrics

காற்றோடு பட்டம் போல இந்தக் காற்றோடு பட்டம் போல காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்க தான் அட யார் சொல்லக் கூடும்? அது போகும் போக்கதான் கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா? எங்கோப் போனது என்னிடம் வந்து சேருமா? ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்க்கை எப்போதும் கண்ணாமூச்சியா? இந்த மண் மேலே இப்போது நான் தான் சாட்சியா? காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்க தான் அட யார் சொல்லக் கூடும்? அது போகும் போக்கதான் பக்கத்துல வாழும் போது உன் அரும தெரியல உன் அரும தெரியும் போது பக்கம் நீயில்ல தன்னந்தனி படகு போல தத்தளிக்கும் வாழ்க்க போல தண்டனைகள் ஏதும் இல்ல இந்த மண்ணுள்ள நீரிலே பூத்தாலும், பூக்களின் வாசங்கள் தண்ணியிடம் சேர்வதில்லையே, என்ன விதியோ? அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே கல்லிலே பூவும் பூக்குதே காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்க தான் அட யார் சொல்லக் கூடும்? அது போகும் போக்கதான் சின்னதொரு சோற்றைதானே, சிற்றெறும்பு கூடியே தன்னுடைய வீட்டை நோக்கி கொண்டு போகுமே உள்ளபடி சொல்வதென்றால், சிற்றெறும்பு போல கூட சொந்தங்களை காக்கவில்லை இங்கே நானுமே கோயில் தான் போனாலும், புன்னியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ?, இந்த உலகில் இன்றுதான் இன்றுதான் என் முகத்தைப் பார்க்கிறேன் கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்க தான் அட யார் சொல்லக் கூடும்? அது போகும் போக்கதான் கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா? எங்கோப் போனது என்னிடம் வந்து சேருமா? ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்க்கை எப்போதும் கண்ணாமூச்சியா? இந்த மண் மேலே இப்போது நான் தான் சாட்சியா?
Writer(s): N.r. Raghunanthan, Sarathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out