Credits

PERFORMING ARTISTS
P. Susheela
P. Susheela
Performer
COMPOSITION & LYRICS
M. S. Viswanathan
M. S. Viswanathan
Composer
Kannadasan
Kannadasan
Songwriter

Songtexte

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
பிறந்து வந்தபோது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்தபோது நெஞ்சம் திறந்திருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
அந்த பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்தபிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்தபிறகு நெஞ்சில் மயக்கம் வந்தது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிசென்றது
அங்கு வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிசென்றது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
உச்சிவெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சிவெயில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
நம் உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது
பேசி கலந்துவிட்டால் கோபம் மாறி நேசம் ஆகுது
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவர் ஆனார்
பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவர் ஆனார்
அந்த பெரியவர்கள் கோபத்தினால் சிறியவர் ஆனார்
அந்த பெரியவர்கள் கோபத்தினால் சிறியவர் ஆனார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகள் எல்லாம்
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்கள் ஆனார்
என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்கள் ஆனார்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதுதான் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனசால் ஒன்று
Written by: Kannadasan, M. S. Viswanathan
instagramSharePathic_arrow_out

Loading...