Musikvideo
Musikvideo
Credits
PERFORMING ARTISTS
K.S. Chithra
Performer
Ilaiyaraaja
Performer
K. J. Yesudas
Performer
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Kavignar Pulamaipithan
Songwriter
Songtexte
கல்யாண தேனிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேனிலா காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டி கூடலா தேவார பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா
என் அன்பு காதலா எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலா வா-வா நிலா
கல்யாண தேனிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா
கல்யாண தேனிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேனிலா காய்ச்சாத பால் நிலா
Written by: Ilaiyaraaja, Kavignar Pulamaipithan