Credits
PERFORMING ARTISTS
Mathichiyam Bala
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Vairamuthu
Songwriter
Lyrics
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் கால் அடியில்
நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு
ஏய் ஷு ஷு நிறுத்து நிறுத்து
என்ன சினிமா பாட்டு பாடிக்கிட்டிருக்க
ஏன் சொந்தப்பாட்டெல்லாம் பாடமாட்டியா
வகுத்து பாட்டுக்கு பாடிகிட்ருக்கேன்
ஏன் வம்பு பண்ற?
சொந்தப்பாட்ட எவன் கேக்குறான்?
எதுக்கு அந்த கலைஞர்களை
ஓரமா உட்காரவச்சிட்டீங்க why?
தப்பாட்டத்த இப்போ கூப்புடாதப்பா
என்னது தப்பாட்டமா போயாங்கய்யாங்
இதான்யா இந்த நாட்டோட சரியான ஆட்டமே
Hey சரி, இங்க வா
நீ அடி
மக்க கலங்குதப்பா...
மக்க கலங்குதப்பா மடிப்புடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா
என்னப் பெத்த மக ராசா...
ஏ... ய் ஏய் எம்புட்டு தூறம்யா போவ
ஏன்யா சவ்வா இழுக்குற
சியான் நாலு பொண்டாட்டி கட்டி ஆண்டு அனுபவிச்சிட்டு போயிருக்காப்ல
சந்தோசமா பாடு நிம்மதியா போவாப்ள
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா
மக்க கலங்குதப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா... நாடு கலங்குதப்பா
நாட்டு மக்க தவிக்கிதப்பா
என்ன பெத்த மகராசா...
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா
ரோசாப்பூ மாலப்போட்டு...
ரோசாப்பூ மாலப்போட்டு ராசா நீ அமர்ந்திருக்க
ரோசாப்பூ மாலப்போட்டு ராசா நீ அமர்ந்திருக்க
அத்தருமை மணக்குதப்பா...
அத்தருமை மணக்குதப்பா
பன்னிரு வாடையப்பா அங்கமணக்கும் ராசா...
ஏ அங்கம் மணக்கும் ராசா
இந்த ஊரக்காக்கும் ராசா
ஏ அங்கம் மணக்கும் ராசா
இந்த ஊரக்காக்கும் ராசா
பார்த்தாலே பச்சமுகம்...
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்
பார்த்தாலே பச்சமுகம் பாலு வடியும் முகம்
பச்ச முகத்தழகா என் ராசா
பச்ச முகத்தழகா என் ராசா
நீங்க பரலோகம்... எங்கள விட்டு பரலோகம்...
ராசா பரலோகம்... போனியப்பா என் ராசா
நீங்க பரலோகம் போனீங்களே என் ராசா
மக்க கலங்குதப்பா...
மக்க கலங்குதப்பா மடிப்புடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா...
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்கிதப்பா
என்னப் பெத்த மக ராசா இந்த ஊரக்காக்கும் ராசா
நீ என்னப்பெத்த மகராசா இந்த ஊரக்காக்கும் ராசா
Written by: Vairamuthu, Yuvan Shankar Raja

